வேத பாடசாலை, சுல்லியா, கர்நாடகா
கர்நாடக மாநிலத்தில் தக்க்ஷினா கன்னட மாவட்டத்தை சேர்ந்த ஒரு தாலுகா தான் சுல்யா என்றும் அழைக்கப்படுகின்ற சுல்லியா நகரம். இந்த சிறிய நகரமானது தென் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பசுமையான மரங்களால் சூழப்பட்டது. இந்த சாந்தமான மற்றும் இயற்கை எழில் கூடிய சூழலில் பூஜ்யஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் பரிபூரண அனுகிரஹத்துடன் வேத பாடசாலையிலிருந்து வேத மந்திரங்கள் நாள் முழுக்க எதிரொலித்து கொண்டிருக்கிறது. பாரத்வாஜ முனிவருக்கு பின் அவர் பெயரில் இந்த வேத பாடசாலை பாரத்வாஜ ஆச்ரமம் என பெயர் பெற்றது. ஆச்ரமத்தின் பெயருக்கு ஏற்றாற்போற் இந்த ஆச்ரமத்தின் இறைதன்மையினை நாம் இங்கு அறியலாம். வேதம் பயிலும் மாணவர்கள் மற்றும் வேத பாடசாலையின் சில புகைபடங்கள் உங்கள் பார்வைக்கு வழங்குகிறது kamakoti.org